🗓️ 2020–2025 TNPSC PYQ POINTS
Bhimrao_Ramji_Ambedkar TNPSC Important Points — பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் பங்களிப்பு குறித்து
தேர்வுகளில் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. கீழே முக்கிய குறிப்புகள்:
- சாதி ஒழிப்பு பற்றி அம்பேத்கர் எழுதியுள்ளார்.இந்து சமய நூல்களில் இருந்த சாதி முறையை விமர்சனம் செய்தார்.
- "கல்வியறிவு பெறு, அமைப்பாக ஒன்று திரள், கிளர்ந்தெழு" - டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கார்.
- டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
- "மூக்நாயக்" இதழை அம்பேத்கர் மராத்தி மொழியில் வெளியிட்டார்.
- இந்தியா ஒரு குடியரசு நாடு என்று தொடங்குவதற்கான ஒரு புள்ளியாக பிரிட்டிஷ் அமெரிக்கன் - சுவிஷ் அரசியலமைப்பு மாதிரியை கையாளுவதில் நேருவும், அம்பேத்கரும் ஓர் சிறந்த வழியாகக் கொண்டிருந்தார்கள்.
- "நான் விரும்பும் மதமானது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை போதிக்கும்" - டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கார்
- ஆண்களுக்குக் கல்வி அவசியம் என்பது போல் பெண்களுக்கும் கல்வி அவசியம். பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்ளாமல் உயர் கல்விக்குச் செல்ல வேண்டும் என்ற கோட்பாட்டின் வழிக் கல்வி பெறுதலைக் குறித்து அறிவுரை கூறியவர் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்.
- தாழ்த்தப்பட்ட மற்றும் சாதிய இந்துக்கள் மத்தியிலே சமூக சமத்துவத்தை போதிக்க டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் ஆல் 'சமாஜ் சமதா சங்கம்' தொடங்கப்பட்டது.
- "ரூபாயின் பிரச்சனை" என்ற ஆய்வறிக்கையை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சமர்ப்பித்தார்.
- மராத்தியில் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வெளியாகும் பத்திரிகையான 'பஹிஷ்கிருந் பாரத்தை' தொடங்கியவர் அம்பேத்கார்.
- அம்பேத்காரால் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சி "இந்தியக் குடியரசுக் கட்சி."
- 1924 ஆம் ஆண்டு அம்பேத்கர் தீண்டத்தகாதவர்களின் தார்மீக மற்றும் பொருள் முன்னேற்றத்திற்காக பம்பாயில் 'பஹிஷ்கிருத் ஹித்கரனி சபா' என்ற அமைப்பைத் தொடங்கினார்.
- அனைத்திந்திய பட்டியல் இனத்தினரின் கூட்டமைப்பினை நிறுவியவர் B.R. அம்பேத்கர்.
- "வாழ்க்கை என்பது உயரியதாக இருக்க வேண்டுமே தவிர நீளமானதாக அல்ல" - டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கார்
- லண்டன் அருங்காட்சியகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்காரின் சிலை காரல் மாக்ஸ் சிலையோடு இணைக்கப்பட்டுள்ளது.
- "முதலில் நாம் இந்தியர்கள், அதற்குப் பிறகு தான் ஹிந்துக்கள் அல்லது அதற்குப் பிறகுதான் முகமதியர்கள் என்று ஒரு சிலர் கூறுவது என்னால் ஏற்க முடியவில்லை. எனக்கு அதில் திருப்தியுமில்லை. எல்லோருமே முதலில் இந்தியர்கள் மற்றும் இறுதிவரை இந்தியர்களே, இந்தியர்களைத் தவிர வேறொன்றுமில்லை என்றிருக்க நான் விரும்புகிறேன்" என்று கூறியவர் பி.ஆர். அம்பேத்கர்.
- டாக்டர் B.R. அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சபையின் அரசியலமைப்பு சட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவராக இருந்தார்.
- பி ஆர் அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
- "சுயராஜ்யத்தில் எனக்கு என்ன பங்கு இருக்கிறது என்று சொல்லுங்கள்" -இது B,.R.அம்பேத்கார் வார்த்தைகள்.
- ஒடுக்கப்பட்ட மக்கள் தெளிவான பிரதிநிதித்துவத்தை உள்ளாட்சி தேர்தலில் பெற்றிடவும் மற்றும் பொது பணியில் தேர்வாகிட உதவிடுவதும் பூனா ஒப்பந்தமாகும்.
- 1936 ல் சுதந்திர தொழிலாளர் கட்சியைத் தொடங்கியவர் பி.ஆர். அம்பேத்கர்.
- Dr.B.R.அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு 1990.