🗓️ 2020–2025 TNPSC PYQ POINTS
human_diseases TNPSC Important Points — மனிதநோய்கள் குறித்து
தேர்வுகளில் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. கீழே முக்கிய குறிப்புகள்:
- லுகோடெர்மா அல்லது வெண்நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியாது.
- HIV-1 வைரஸ்களில் ஒரே மாதிரியான நேர்புலனுடைய இரண்டு மூலக்கூறுகள் உள்ளன அவைகள் எஸ்.எஸ்.ஆர்.என். ஏ ஆகும்
- நிறக்குருட்டு நோய் என்பது பாரம்பரியம் சார்ந்த நோயாகும்.
- லுகோடெர்மா அல்லது வெண்நோய் தோல் நிறமி இழப்பை ஏற்படுத்தும் ஒரு தோல் தோய்.
- காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு நுரையீரல் ஆகும்.
- ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கிய அறிகுறி இரத்தச் சோகை ஆகும்.
- உயர் அடர்த்தி கொழுப்புப் புரதங்கள் புறத் திசுக்களில் இருந்து கல்லீரலுக்குக் கொலஸ்ட்ராலைக் கொண்டு செல்கின்றன.
- காலா அசார்/கருங்காய்ச்சல், லீஸ்மேனியா டோனாவானிவால் உண்டாகின்றது.
- நோய்க் காரணியான போர்டெடெல்லா பெர்டுசிஸ் சுவாசக் குழாய் பகுதியை பாதித்து கக்குவான் இருமல் நோயை ஏற்படுத்துகிறது.
- மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது மேலிக்னன்ட் கட்டி.
- லுகோடெர்மா அல்லது வெண்நோய் ஒரு தொற்றாத நோய்.
- பிளாஸ்மாவில் உள்ள லிப்பிட்களின் மதிப்பீடு தமனி சுவர்களில் கொலஸ்ட்ரால் படிவதற்கு வழிவகுக்கிறது. இது பெருத்தமனி தடிப்புத்தோல் அழற்சிக்கு வழிவகுக்கிறது.
- பிளாஸ்மோடியம் வைவாக்ஸ், பி.மலேரியா, பி.ஃபால்சிபாரம் ஆகியன மலேரியா நோயை உண்டாக்கும் ஓட்டுண்ணி ஆகும்.
- மேகவெட்டை நோய்,டியூபர்குலோஸிஸ் (காசநோய்), வயிற்றுப் போக்கு ஆகியன பாக்டீரியாவினால் ஏற்படுத்தப்படும் நோய்கள் ஆகும்.
- அடித்தொண்டை அழற்சி - ஸ்டெரப்டோகாக்கஸ் பையோஜின்ஸ்
- கக்குவான் இருமல் - போர்டிடெல்லா பெர்டுஸல்
- நமது உடலில் மெலடோனின் அதிகம் உருவாவதால் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.
- அஸ்பெஸ்டாசிஸ் என்ற நாள்பட்ட அழற்சி நிலையால் திசுக்கள் பாதிப்படையும் உறுப்பு நுரையீரல் ஆகும்.
- பேசிலஸ் ஆந்த்ராசிஸ் பாக்டீரியாவால் கம்பளி பிரிப்போர் நோய் உருவாகிறது.
- ஹீமோபிலியா பாலினவழி மரபுபேற்றின் உதாரணமாகும்.
- யானைக்கால் நோயை ஏற்படுத்தும் உயிரி உச்சரீரியா பாங்கரப்டி
- அடிலெக்டாஸிஸ் என்பது நுரையீரல் காற்று நுண்பை சேதமடைவதாகும்.
- குரோமோசோம் 21-இல் ஒரு நகல் கூடுதலாக இருப்பின் அதனால் ஏற்படுவது டவுன் சின்ட்ரோம் ஆகும்.
- குடல் நோய் காய்ச்சல் - சாய்மோனெல்லாடைஃபி
- கரோனா வைரஸ் என்ற சொல் முதன் முதலில் "நேச்சர்" அறிவியல் ஆய்விதழில் வெளியிட்ட ஆண்டு 1968 ஆகும்.
- உலகில் முதல் முதலில் ஹெப்படைட்டிஸ் B நோய்க்கு செயற்கை தடுப்பூசி கண்டறியப்பட்டது.
- பாதரசம் மாசு "மினமேட்டா நோய்" எனப்படும் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை தாக்கும் நோயினை ஏற்படுத்துகிறது.
- பாக்டீரிய வயிற்று கடுப்பு - ஷிஜெல்லா இனங்கள்
- ரேபிஸ் விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு வரும் நோய் ஆகும்.
- உருளைப்புழு உடல் சுவரில், வெளியில் இருந்து உள் பக்கமாக உள்ள அடுக்குகளின் வரிசை கியூட்டிகல், மேல்தோல், நீளமான தசைகள் ஆகும்.
- கார்பன் மோனாக்சைடு வாயுடன் மனிதனின் ஹீமோகுளோபலின் மிக அதிகமாக பிணைப்பினை ஏற்படுத்தி கொள்ளும்.
- எபிதீலியல் செல்லில் புற்றுதோய் உருவாவதற்கு கார்சினோமா என்று பெயர்.