🗓️ 2020–2025 TNPSC PYQ POINTS
Vallabhbhai_Patel TNPSC Important Points — சர்தார் வல்லபாய் பட்டேல் பங்களிப்பு குறித்து
தேர்வுகளில் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. கீழே முக்கிய குறிப்புகள்:
- இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படுபவர் வல்லயாய் படேல்.
- ஒன்றுபட்ட இந்தியாவானது சிறியதாக இருந்தாலும் ஒழுங்கற்ற, குழப்பமான மற்றும் பலவீனமான பெரிய இந்தியாவை விட சிறந்ததாகும் - சர்தார் வல்லபாய் பட்டேல்.
- 1931ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் தலைமை வகித்தவர் வல்லபாய் பட்டேல்.
- வல்லபாய் பட்டேலுக்கு 'சர்தார்' பட்டம் பர்தோலி விவசாயிகளால் வழங்கப்பட்டது.
- "இந்தியாவின் பிஸ்மார்க்" என்று அழைக்கப்பட்ட சிறந்த இந்திய தலைவர் சர்தார் பட்டேல் ஆவார்.
- மார்ச் 1931 இல் நடந்த கராச்சி அமர்வு சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதோடல்லாமல் சுதந்திர இந்தியாவின் பொருளாதார கொள்கை பற்றிய ஒரு பார்வையை வழங்கியது. இந்த உரிமைகளும் சமூக மற்றும் பொருளாதாரத் திட்டங்களும் உறுதி செய்வது யாதெனில் அரசியல் சுதந்திரம் மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் என்பது பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாகும்.