🔔 Stay Updated!

📣 தினசரி TNPSC வினாக்கள் உடனே தெரிந்துக்க! 🔔 Enable செய்யுங்கள்.

TNH வீரபாண்டிய கட்டபொம்மன் – TNPSC PYQ முக்கிய குறிப்புகள்

2020–2025 வரை கேட்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தொடர்பான முக்கிய புள்ளிகள்

🗓️ 2020–2025 TNPSC PYQ POINTS

Veerapandiya_Kattabomman TNPSC Important Points — வீரபாண்டிய கட்டபொம்மன் பங்களிப்பு குறித்து தேர்வுகளில் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. கீழே முக்கிய குறிப்புகள்:

  • பாஞ்சாலம் குறிச்சி கோட்டையின் மீது தாக்குதல் தொடுத்தவர் மேஜர் பேனர்மான் ஆவார்.
  • சிவசுப்ரமணியனார் - நாகலாபுரம்
  • ஆங்கிலேயர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனை பிடித்து தூக்கிலிட்டனர்.
  • மருதுபாண்டியன் - சிவகங்கை
  • பாஞ்சாலங் குறிச்சியின் பாளையக்காரராக வீரபாண்டிய கட்டபொம்மன் இருந்தார்.
  • கட்டபொம்மனை தூக்கிலிட்டு கொலை செய்வதை நிறைவேற்றியவர் மேஜர் பானர்மென்.
  • சிவகிரி கோட்டைத் தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பானதாக இருந்தது.மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வலுவான அரண்களோடு அது அமைக்கப்பட்டிருந்தது.
  • கட்டப்பொம்மன் ஆங்கிலேயர்களால் அக்டோபர், 1799ல் தூக்கிலிடப்பட்டார்.
  • தீரன் சின்னமலை - சங்ககிரி கோட்டை
  • ஊமைத்துரை -ன் இயற்பெயர் குமாரசாமி நாயக்கர்.
  • கலெக்டர் ஜாக்சன் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் ராமநாதபுரம் சந்திப்பு நிகழ்வை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை குழுவில் இடம் பெற்றவர்கள் வில்லியம் பிரௌன்,வில்லியம் ஓர்ம்,ஜான் காஸ்மேயர் ஆகியோர் ஆவர்.
  • கோபால நாயக் - திண்டுக்கல்
  • கட்டபொம்மன் - பாஞ்சாலங்குறிச்சி
  • ஆங்கில படை அதிகாரியான வில்லியம் புல்லர்டன் 1783-ல் பாஞ்சாலங் குறிச்சி கோட்டையை தாக்கினார்.
  • சென்னை மாகாணத்தின் ஆளுநர் எட்வர்ட் கிளைவ் ஆற்காடு நவாபின் அரசைப் பறித்துக் கொண்டார்.பாளையக்கார ஆட்சி முறையை ஒழித்தார். சென்னையில் தலைமை நீதிமன்றம் இவருடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது.
  • ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் கயத்தாறு ஆகும்.
  • கேரள வர்மா - கோயம்பத்தூர்
  • ஜாக்சன் இராமநாதபுரத்தில் உள்ள இராமலிங்க விலாசில் கட்டபொம்மனை சந்திக்க இசைந்தார்.
  • கட்டபொம்மன் - கயத்தாறு கோட்டை
  • மருது சகோதரர்கள் - திருப்பத்தூர் கோட்டை
  • சிவகிரி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் கூட்டு வைத்துக் கொள்ளவில்லை.